பெண்கள் கல்வி ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறும் தலிபான் அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பெண் கல்விக்கான வழக்கறிஞரான மதியுல்லா வெசா, திங்கட்கிழமை காபூலில் கைது செய்யப்பட்டார் என ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா தூதரகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இதுவரை அவரை கைது செய்தமை மற்றும் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தலிபான் அரசாங்கம் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
பல ஆண்டுகளாக பெண் கல்விக்காக, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்காக குரல் கொடுத்துவந்த அவர், ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறாம் வகுப்புக்கு பின்னர் பாடசாலையில் இருந்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் பெண்களுக்கு தலிபான்அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.