மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின், காலிறுதிப் போட்டிகளில், ஜென்னிக் சின்னர், சொரானா சிர்ஸ்டியா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜென்னிக் சின்னர், பின்லாந்தின் எமில் ருசுவூரியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், ஜென்னிக் சின்னர், 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, பெலராஸின் அரினா சபலெங்காவுடன் மோதினார்.
இப்போட்டியில், சொரானா சிர்ஸ்டியா, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பொட்டாபோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில், ஜெசிகா பெகுலா, 4-6, 6-3, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.