அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் கிடைத்துள்ள வாக்குக்கள் மற்றும் பெரும்பான்மை குறித்த அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆவணங்களை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீரித்தமை செல்லுமா, இல்லையா என்ற உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவெளியிடும்.
இதேவேளை ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் அமர்வில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.