வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
220 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாயாகவும், 340 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 310 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 230 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.