• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

KP by KP
2026/11/08
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

கடந்த கிழமை சமூக ஊடக வலைத்தளங்களில் அதிகம் பேசுபொருளாகிய இரண்டு விடையங்களைப் பற்றியது இக்கட்டுரை.முதலாவது,ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி எழுதிய முகநூல் குறிப்பு.இரண்டாவது கம்ப வாருதி ஜெயராஜ் ஆற்றிய உரை.

முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனின் மனைவி எழுதிய முகநூல் குறிப்பு.தனது கணவர் வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகளைச் செய்கிறார் என்பதனைப் படம்பிடித்து முகநூலில் பகிர்ந்து,அதன் கீழ் அவருடைய மனைவி ஒரு குறிப்பை எழுதியிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் நிறைய வேலைப் பளுக்கள் இருந்தபோதிலும்,நேர நெருக்கடி இருந்த போதிலும், ஒரு குடும்பத் தலைவனாக அவர் பொறுப்போடு,அன்போடு தன்னடக்கத்தோடு  வீட்டு வேலைகளைச் செய்கிறார் என்ற பொருள்பட அந்தக் குறிப்பு அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் கடந்த தசாப்தங்களில் எளிமைக்கு முன்னுதாரணமாக; தன்னடக்கம்,தியாகம்,அர்ப்பணிப்பு என்பவற்றிற்கு முன்னுதாரணமாக;துறவு சன்னியாசம் என்பவற்றுக்கு முன் உதாரணமாக பல சான்றோரைக் கண்டு விட்டார்கள்.ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி,தனது கணவன் எவ்வளவு எளிமையானவர்,பொறுப்புள்ளவர்,தன்னடக்கம் உள்ளவர் என்பதனை சிலாகித்து எழுதிய பொழுது தமிழ் சமூக ஊடக வலைத்தள உலாவிகளுக்கு அது சினத்தை ஏற்படுத்தியது.ஆளுக்காள் மீம்ஸ்களை உருவாக்கி அந்தக் குடும்பத்தையே கேவலப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது யாழ்ப்பாணத்து மக்கள்தான்.அவருடைய மனைவியின் சுய புகழ்ச்சியைக் கண்டு எரிச்சல் அடைந்ததும் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள்; தாங்களே மீம்ஸ் ஆக்குகிறார்கள். இதைத்தான் அர்ச்சுனாவுக்கும் செய்தார்கள்; செய்கிறார்கள்.யார் என்றே தெரியாதவர்களுக்கு வாக்களித்து,அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிவிட்டு,இப்பொழுது அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்டு எரிச்சலடைகிறார்களா?

இது தமிழ் அரசியலில் தற்போது உள்ள தர நிலையைக் காட்டும் ஒரு விடயம். அப்படித்தான் மற்றொரு விடயம்,கடந்த கிழமை இடம்பெற்றது.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில் கம்ப வாருதி ஆற்றிய உரை அது.அந்த உரையில் கம்ப வாருதி தமிழ் மக்கள் இரண்டு விடையங்களை மறக்க வேண்டும் என்று கூறுகிறார்.முதலாவது கடந்த காலப் போராட்டத்தை.இரண்டாவது புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளில் தங்கியிருப்பதைக் கைவிட வேண்டும் என்கிறார்.அவர் ஏன் அவ்வாறு கூறினார்? “அதை (போராட்டத்தை)ச் சொல்லிச் சொல்லியே தமிழ் மக்களை கொதிநிலையில் வைத்திருந்து தங்கள் வாழ்வை சிலர் வாழப் பார்க்கிறார்கள்” என்று கூறுகிறார்.

கம்ப வாருதி எதைக் கூறவருகிறார் என்பது விளங்குகிறது.ஆனால் அவர் அதைக் கூறிய விதம்தான் பிழைத்து விட்டது.கடந்த காலக் காயங்களை வைத்து ஒரு பகுதி அரசியல்வாதிகள் வாக்குகளைத் திரட்டுகிறார்கள் என்பது உண்மை.ஆனால் கடந்தகாலக் காயங்கள் இப்பொழுதும் ஆறாமல் இருக்கின்றன என்பது அதைவிடப் பேருண்மை.ஆறாத அந்தக் காயங்களுக்கு சிகிச்சையாக அமையவில்ல ஓர் அரசியல் தீர்வு இன்றுவரை காணப்படவில்லை என்பது அதைவிடப் பேருண்மை.

கடந்த காலக் காயங்கள் ஆறாமல் இருக்கின்றன என்பதுதான் பிரச்சினை. ஒரு பிரச்சினை இருக்கும் வரையிலும் அதன்மீது பல்வேறு தரப்புக்களும் பதில் வினையாற்றும்.அதை தங்கள்தங்கள் நோக்குநிலையில் இருந்து பயன்படுத்தும்.எனவே இங்கு மூலகாரணம் எதுவோ அதைத்தான் நீக்க வேண்டும்.மூல காரணத்தை நீக்காமல் வைத்திருக்கும் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பைத்தான் விமர்சிக்க வேண்டும்.மாறாக அந்த அரசுக் கட்டமைப்பின் அரசுத் தலைவரை கம்பன்விழாவிற்கு அழைத்து,பொன்னாடை போர்த்திவிட்டு, அந்தக் காயங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் கூப்பிட்டு பொன்னாடை போர்த்திவிட்டு,போராட்டத்தை மறந்து விடுங்கள் என்று கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது ?அதை முதலில் தனது மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கம்பன் கழகம் கூறவேண்டும். அவரது மேடைகளில் ஏறி சிம்மாசனங்களில் அமைந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அதுதொடர்பாக தமது வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

கம்பன் கழகம் ஒரு சமயப் பண்பாட்டு நிறுவனம்.ஆனால் அதற்கென்று அரசியல் நிலைப்பாடுகள் உண்டு.அதை கம்ப வாருதியின்  கேள்வி பதில்களில் காணலாம்.கம்பன் மேடைகளில் அவர் யாரைக் கொண்டாடுகிறார் என்பதிலும் மிகத் தெளிவான அரசியல் நிலைப்பாடுகள் உண்டு. கொழும்பில் நடக்கும் கம்பன் விழாக்களில் அவர் அரசுத் தலைவரை,அரச பிரதானிகளை அழைப்பார்.யாழ்ப்பாணத்தில் நடக்கும் கம்ப விழாக்களில் அவர் பல்கலைக்கழகப் பிரதானிகளை,தன்னுடன் ஒத்துப்போகும் அரசியல்வாதிகளை,சமூகத்தில் மினுங்கிக் கொண்டு மேல் எழுபவர்களை அழைத்துக் கௌரவிக்கிறார். யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதானிகளில் ஒரு பகுதியினர் எப்பொழுதும் கம்பன் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.அந்த ஜனரஞ்சக மேடையின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் அவர்களுடைய அறிவுசார் செயற்பாடுகளுக்கும் இடையில் என்ன சம்பந்தம் உண்டு என்பதனை அவர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு விளக்கிக் கூறவேண்டும்.

கம்பன் கழகம் பெருக்கத் தொடங்கிய காலமிருந்து அதன் மேடைகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்களை அவ்வாறு கொண்டாடுவதன் மூலம்,கம்பன் கழகம் தனக்கு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் சம்பாதித்துக் கொள்கிறது.ஆனால் அதேசமயம் கம்ப வாருதி பல்கலைக்கழகங்களையும் விமர்சிப்பதுண்டு.

எனினும் கடந்த 17 ஆண்டுகளாக கம்ப வாருதி தனது கேள்வி பதில்களிலும் மேடைகளிலும் அரசியல் பரிமாணத்தைக் கொண்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவருகிறார்.ஒரு சமயப் பண்பாட்டு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், தான் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் கருத்துக்கூற அவருக்குள்ள உரிமையை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.கடந்த கிழமை அவர் துர்கா மணிமண்டபத்தில் தெரிவித்த கருத்துக்களின் ஒரு துண்டு காணொளியை மட்டும் வைத்துக்கொண்டு அவரை விமர்சிக்கக்கூடாது என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.ஆனால் தான் கூற வந்த விடயம் தவறாக விளங்கிக் கொள்ளப்படத்தக்க விதத்தில் கூறப்பட்டு விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொள்வாரா?

தமிழ்ச் சமூகத்தின் மீதும் தமிழ் அரசியலின் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒரு பகுதி ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதேசமயம் தமிழ்ச் சமூகப் பொருளாதார அரசியலில் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ வெற்றிடத்தின் விளைவுகளே அவை யாவும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு காணிச் சந்தையில் சமநிலையை குழப்புகிறது என்பது உண்மை. அதேசமயம் உள்ளூர் சந்தையின் மீது அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்தவல்ல பலமான அரசியல் தலைமை இல்லை என்ற வெற்றிடம்தான் அதற்குப் பிரதான காரணம்.தாயகத்தில் தமிழ்த் தலைமைத்துவம் பலமானதாக இருந்தால் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசதிகாரம் தாயகத்தின் மீது தீய விளைவுகளை ஏற்படுத்தாது.தாயகத்தில் தமிழ்த் தேசியத் தலைமைத்துவம் பலமாக இருந்தால்,இறந்த காலத்தின் காயங்களை வைத்துப் பிழைப்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் மேலுயர முடியாது.தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைத்துவம் பலமாக இருந்தால்,தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு ஆன்மாவை அரித்துத் தின்னும் பல விடயங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்காது.

எனவே இங்கு பிரதான காரணம்,தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்தான்.அந்த வெற்றிடம் காரணமாகத்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டு வேலைகள் செய்வது பேசு பொருளாகிறது.அந்த வெற்றிடம் காரணமாகத்தான் கம்ப வாருதி கூறுவதுபோல இறந்த காலத்தை வைத்து அரசியலில் பிழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.அந்த வெற்றிடம் காரணமாகத்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசதிகாரம் தாயகத்தின் மீது தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது.இவை மட்டுமல்ல, அந்த வெற்றிடம் காரணமாகத்தான் கம்ப வாருதி சமூகத்திற்குப் போதனை செய்யும் தகுதியையும் பெறுகிறார்.

ஆனால் அந்த வெற்றிடத்திற்குப் பொறுப்பானவர்களை தனது மேடைகளில், சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு தமிழ்ச் சமூகம் உய்வதற்கு ஆலோசனை கூறுகிறார்.அவர் அதைக் கூறும்போது அரங்கில் காணப்பட்ட ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள்.தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்துத் தாங்களே சிரிக்கின்ற,தாங்களே விமர்சிக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் எதற்கெல்லாம் கைதட்டப் போகிறது?

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்
இலங்கை

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!
இலங்கை

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

2026-11-08
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

2026-11-08
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!
சினிமா

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

0
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

0
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

0
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

0
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

0
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

2026-11-08
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

2026-11-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: