அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமைகோரி சீனா பதிலளித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டு ணுயபெயெn சில பகுதிகளின் பெயர்கள், நிர்வாக ரீதியிலாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சீனாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தன்னிச்சையாக உரிமை கோருவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.