அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால், சிகிச்சைப் பிரிவை அண்மையில் மூடிவிட்டு, சிகிச்சை பெற்ற சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவுக்கு சொந்தமான சிறுவர் பிரிவு மூடப்பட்டமையால் மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.
இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீரவிடம் கேட்டபோது, விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும், எனினும் எத்தனை பேர் என கூற முடியாது எனவும் தெரிவித்தார்.