சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை மீதான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரியுள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அதிகாரிகளுக்கு இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் பற்றிய விளக்கமளிக்கும் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச சமூகம் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.
2022 டிசம்பரில் ஜனாதிபதியால் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டமை உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.