ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்களை இயக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக் கொண்டுள்ளார்.