தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது.
தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது தங்களுக்கு தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.