அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசுக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளமையினால் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்கு முன் அவர், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதேநேரம், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த அட்டவணை நகலை பொதுமக்களில் ஒருவர் வைத்திருந்த நிலையில் பாதுகாப்பு மீறல் குறித்து பொலிஸாரினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
வடக்கு அயர்லாந்தில் 30 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவிய அமைதி ஒப்பந்தம் மற்றும் பெரியவெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது விஜயம் அமைவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.