ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும். ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.
அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி?
உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல. உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல. உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
இதனைத் தான் வள்ளுவன், ‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்று கூறியிருக்கின்றார்.
இந்த வள்ளுவன் வாக்கு இணைங்கவே, அயலுறவுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவும், இலங்கைக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றது.
51 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்த முடியாது என்று இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலைமையின் பின்னர், எந்தவிதமான இரஜதந்திர, மூலோபய நன்மைகளையும் கருத்தில் கொள்ளாது இந்தியா இதுவரையில் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது.
அத்தியாவசிய தேவைகளான, உலர் உணவுப்பொருட்கள், மருந்துகள், எரிபொருள், விவசாய ஊக்கிகள், என்று அளிக்கப்பட்ட உதவிப்பொருட்களின் பட்டியல் நீண்டதாக உள்ளது.
இதற்கு அப்பால், இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு உற்பத்தித்துறை மற்றும் முதலீடுட்டுத்துறையை விஸ்தரிப்தற்கான திட்டங்கள், நாடாளாவிய ரீதியிலான மனிதாபிமானத் திட்டங்கள், சுற்றுலா ஊக்குவிப்புச் செயற்பாடுகள் என்பன அவற்றில் முக்கியமானவையாக உள்ளது.
அதுமட்டுமன்றி இந்தியா 400மில்லின் ரூபா கடனுக்கான கால எல்லையையும் அதிகரித்துள்ளதோடு, இந்திய ரூபாவை பரிவர்த்தனைக்கான வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்தச் செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இதுவொருபுறமிருக்கையில், இலங்கை அரசாங்கம் தனது நெருக்கடியான நிலைமைகளில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தினையே முழுமையாக நம்பியது. இத்துடன் அதனை அணுகவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.
அப்போது, 2.9பில்லியன் டொலர்கள் நீடித்த கடன் உதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியதம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதன் முதற்தொகையும் தற்போது வ
இந்தக் நீடித்த கடன் உதவி கிடைப்பதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நேரடியாகவே அமெரிக்காவுக்குச் சென்று, இலங்கையின் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இணைந்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்தியா கடன்மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டுக் கடிதத்தினை உடனடியாக வழங்கி இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏது நிலைமைகளை ஏற்படுத்தியது.
அதுமட்டுமன்றி, தற்போது, நியூயோர்க்கில் நடைபெற்ற இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் யாப்பான் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன், தாம் விரைவில் கடன் மறுசீரமைப்புக்கான செயற்றிட்டத்திற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். அதுபற்றிய வழிபடமொன்றையும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இந்தச் செயற்பாடானது, இலங்கையின் பொருளாதரம் செழுமையுடன் மீண்டெழுவதற்கான முதற்படியாக இருக்கின்றது.
அத்துடன், இந்தியாவின் உறுதிப்பாடும் தொடர்ச்சியாக உள்ளதென்பதும் வெளிப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கையில் உள்ள தொழில்வாண்மையாளர்கள், மற்றும் மாணவர்களுக்கான கற்றலுக்கான ஏற்பாடுகளையும் இந்திய அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.