கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று அதிகளவிலான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
முன்னதாக உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, வெளியில் செல்பவர்கள் கவனமாக இருக்குமாறும், குழந்தைகளுக்கு இயன்ற அளவு தண்ணீரை குடிக்கக் கொடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நிலவும் காலநிலை காரணமாக பண்டாரவளை, கேகாலை மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நேற்றிரவு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.