இந்தியாவின் மாநிலங்களில் காணப்படுகின்ற மாறுபட்ட சமையல்கள் பொதுவாகவே உள்நாட்டவர்களை மட்டுமன்றி வெளிநாட்டவர்களையும் கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில், சமீப காலங்களில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் உணவு வகைகள் நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
அருணாச்சல பிரதேசம் வளமான மற்றும் மாறுபட்ட சமையல் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதன் உணவு வகைகளின் மையத்தில் எளிமையான, புதிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
குறைந்த அளவு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறதோடு, அரிசி, மூங்கில் தளிர்கள் மற்றும் பல்வேறு உள்ளுர் கீரைகள் போன்ற முக்கிய உணவுகள் இறைச்சி மற்றும் மீனுடன் இணைந்து சுவையை உருவாக்குகின்றன.
இவற்றில், குறைந்த அளவு மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட மீன் குழம்பு மற்றும் உலர் இறைச்சி போன்ற உணவுகள் இந்தியாவில் மட்மன்றி உலகளாவிய ரீதியிலும் தடம்பதிக்க ஆரம்பித்துவிட்டது.
நாடு முழுவதிலும் பிராந்திய மற்றும் பழங்குடியின உணவுகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் அருணாச்சல உணவுகள் மீதும் அதன் வெளிப்பாடு அதிகமாகியுள்ளது.
புதிய, அற்புதமான சமையல் அனுபவங்களை பொதுமக்கள் தேடுவதால், அதிகம் அறியப்படாத பகுதிகளை நோக்கி அருணாச்சல பகுதியின் பாரம்பரிய உணவுகள் மற்றும் உணவகங்கள் நகர்வதோடு இளைய தலைமுறையினரின் அதிகரித்த நடமாட்டம் உள்ள பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளன.