2022-2023 நிதியாண்டில் ஜம்மு – காஷ்மீரில் மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலகட்டத்தில் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் 2,63,595 பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பதிவுசெய்வதற்கான வெவ்வேறு அளவுருக்களின் கீழ் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த தரவுகள் வெளிப்பட்டது.
2021-2022 ஆம் ஆண்டில், பெறப்பட்ட மொத்தத் தொகை 7,655 கோடி ரூபாவாக இருந்தது, இது 2022-2023 ஆம் ஆண்டில் 8,938 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டு, சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 15சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும், பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 2,63,595 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் ஜம்மு-காஷ்மீர் வெற்றி பெற்றுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,53,158ஆக இருந்தது, இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு 10,473 வாழ்வாதார வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மார்ச் 2023க்கான பொருள் மற்றும் சேவை வரியின் வருவாயைப் பொறுத்தமட்டில், யூனியன் பிரதேசமானது பஞ்சாப் (10.37), சண்டிகர் (10.09), டெல்லி (17.72) ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களை விட 29.42சதவீதம் அதிகமாக பதிவு செய்துள்ளது.