ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று (24) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னாள் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
மூன்றாவது தடவை அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்ட போதும் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாக அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவிருந்த போதிலும், அவர் அங்கு வரவில்லை.
தற்போதைய சட்டமா அதிபர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான கலந்துரையாடல் காரணமாக அன்று ஆஜராக முடியவில்லை எனகடிதம் ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார்.
தப்புல டி லிவேராவை எதிர்வரும் 19 ல் முதல் தடவையாக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது. அன்றும் அவர் ஆஜராகவில்லை, அவருக்காக வழக்கறிஞர் ஒருவர் அங்கு வந்திருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்யவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.