அறகலய போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் பியத் நிகேஷல மற்றும் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரகலய செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டதாக இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான சரியான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், பியத் நிகேஷல இன்று அதிகாலை இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.