சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை அதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கடன் வரம்பை அதிகரிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கம் திறைசேரி உண்டியல் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய 5,000 பில்லியன் ரூபாய் கடன் எல்லையை 6,000 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கவே முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.