இந்தியாவின் வடகிழக்கு பகுதி நீர்மின் உற்பத்தி மையமாக உள்ளது. இது நாட்டின் மொத்த நீர்வளத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
கூடுதலாக, அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் ஏராளமான வளங்களையும் இப்பகுதியில் கொண்டுள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளின் தொடர்ச்சியான மேம்பாட்டுடன், வடகிழக்கு மண்டலம் அதன் ஆற்றல் திறனைப் பயன்படுத்தி இந்தியாவின் சக்திமையமாக மாறிவருகிறது.
இப்பகுதி சுமார் 58,356 மெகாவோல்ட் என்ற மிகப்பெரிய நீர்மின்சக்தியை பெறுவதற்கு ஏதுநிலைமை கொண்டுள்ளது. இதில் சுமார் 3.47 சதவீதம் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக 2120 மெகாவோல்ட் நீர் மின்சாரம் பெறுவதற்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மீதமுள்ள 92.9சதவீதம் இன்னும் பெறப்பாடாது பாதுகாப்பாக உள்ளது.
அத்துடன் ஹைட்ரோ நிறுவப்பட்ட திறனில் நீப்கோவின் பங்களிப்பு 1,525 மெகாவோல்டாக உள்ளது. அதாவது சுமார் 75.23 சதவீதமாகும்.
அருணாச்சல பிரதேச அரசு 14பெரிய நீர்மின் திட்டங்களை தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மத்திய பொது நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
புதுடில்லியில் இந்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து நீர்மின் திட்டங்கள் குறித்து ஆலோசித்த பிறகு துணை முதல்வர் சௌனா மெய்ன் இதனைத் தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 40,000 கோடி ரூபா முதலீட்டைப் பெற்றுக்கொடுக்க உள்ளதோடு; 2,820 மெகாவோல்ட்; பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்து வருவாயை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலவச மின்சாரத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாவும் உள்ளூர் பகுதி மேம்பாட்டுக்கு சுமார் 100 கோடி ரூபாவும் சாத்தியக்கூறுகளைப் பெற்றுக்கொள்வும் இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.