ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் உள்ள சிறு மற்றும் பெரிய தொழில்களின் பிரதிநிதி சங்கமான அஞ்சுமன் தொழில் கூட்டமைப்பு அப்பிராந்தியத்தில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு 20நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்றுள்ளது.
ஜி-20மாநாடானது, சந்தையில் உள்ளுர் தொழில்துறைக்கு வாய்ப்புகளைத் ஏற்படுத்தும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் உள்ள புதிய முதலீட்டாளர்களுடன் இணைந்து உலகளாவிய சந்தை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள புதுமைகளை உள்ளீர்ப்பதற்கு வழிசமைக்கும் என்றும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2023 மே 22 மற்றும் 24 ஆகிய திகதிகளில் ஸ்ரீநகரில் ஜி20 மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஜம்மு தொழில் கூட்டமைப்பு தலைவர் லலித் மகாஜன் நன்றி தெரிவித்ததோடு, ஜம்மு காஷ்மீருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங்கின் நேர்மையான முயற்சியால், ஏராளமான மக்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு முன்வந்துள்ளனர்.
இந்தியா அரசின் ‘ஸ்டார்ட்அப’; திட்டத்தின் கீழ் உள்ள முதலீட்டாளர்களை nஅவர்களின் தயாரிப்புகளின் உற்பத்திகளை அதிகரிக்கவும் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
2019 ஆகஸ்ட் 5 அன்று சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான்கு ஆண்டுகளில் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.