2023 ஆம் ஆண்டுக்கான G7 உச்சி மாநாடு ஜப்பானின் Hiroshima நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் G7 உச்சி மாநாடு எதிர்வரும் 21ம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் Hiroshima நகருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.
அத்துடன் G7 உச்சி மாநாட்டில், முக்கிய நிகழ்வில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy நேரடியாக கலந்து கொள்வதை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,