பாகிஸ்தானின் பரசினாரின் தெரி மெங்கல் பகுதியில் ஏழு ஷியா பள்ளி ஆசிரியர்கள் உட்பட 8 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக, குர்ராமின் பரசினார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
ஷாலோசான் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பயங்கரவாதிகள் டெரி மெங்கலில் உள்ள பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஏழு ஆசிரியர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
ஷியா ஆசிரியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, குர்ரம் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதியான ஜாஹித் டூரோ அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளையும் மூடுவதாக அறிவித்தார்.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன, ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தின் விளைவாக, பரசினாறு மற்றும் பிற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன, சாலைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன. அத்துடன், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆசிரியர் சுஹைல் ஜமான் போராட்டம் தொடரும் என்றும், சம்பவம் குறித்து முறையான மற்றும் தகுந்த விசாரணை நடத்தப்படும் வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் அறிவித்தார்.
பணிக்கு வராத ஆசிரியர் மீது நிர்வாகமும், கல்வித் துறையும் உடனடியாகக் கவனத்தில் கொண்டும், ஆசிரியர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
பரசினாரின் ஆலோசை பகுதியிலும் பெண்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். இறந்த உடலை எடுத்துச்செல்வதை விட குரல் எழுப்புவது நல்லது என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஏழு பேர் புதைக்கப்பட்டனர் என்று டூரோ பங்காஷ் பழங்குடியினரின் தலைவர், அனயாத் டூரோ கூறினார். இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, பரசினார் பிரஸ் கிளப்பை நோக்கி மாபெரும் துக்க ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.