காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக 782,000 ஹெக்டேர் நிலங்கள், கால்பந்து மைதானங்கள் உட்பட 3,000 சதுர மைல்களுக்கு மேல் எரிந்துள்ளன என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஊழியர்கள் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் அல்பேர்ட்டாவில் 93 பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்தும் பரவிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ மிகவும் மோசமான பதிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன.


















