பொலிஸ் காவலில் இருந்தபோது பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சடலத்தை தோண்டி எடுத்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் ஆகியோரும், குறித்த மரணம் தொடர்பான சுயாதீன விசாரணையை கோரியிருந்தனர்.
இவர்களது இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக அண்மையில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் அன்றைய தினம் மாலையில், திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













