எரிபொருளை பெற்றுக்கொள்ள பிறரது QR குறியீடுகளைப் பயன்படுத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோசடி குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
எனவே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அச்சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் உறுதியளித்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் ஊடாக தெளிவுபடுத்தியதுடன், இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறினார்.