தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.