நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவில் உடையில் வந்த நபர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உயிராபத்தை மேற்கொள்ள எத்தனித்த சந்தர்ப்பத்தில் அப்பட்டமான பொய்களை கூறி இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொலிஸாரின் அராஜக நடவடிக்கை குறித்து நாடாளுமன்றில் அறிவிக்கவிருந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
@athavannews














