தெற்கு உக்ரைனில் உள்ள ககோவ்கா அணை இடிந்ததை பாரிய சுற்றுச்சூழல் அழிவு என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இத்தகைய முக்கியமான உள்கட்டமைப்பு மீதான தாக்குதலால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுக்கும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அணையை அழித்த ரஷ்யாவின் செயற்பாடு வேண்டுமென்றே செய்த குழப்பமான செயல் என்றும் உக்ரேனியப் படைகளைத் தடுக்க வெள்ளத்தை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறான நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்தலும் போருக்குப் பிந்தைய இழப்பீட்டுச் செலவுகளை மொஸ்கோ ஒரு நாள் உக்ரைனுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.