மருத்துவ பரிசோதனைக்காக ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளார்.
சுவாச நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் அதே வைத்தியசாலையில் பல நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக சந்திப்புக்களை அவர் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.