சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்தன தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதற்காக கடந்த மே மாதம் 28ஆம் திகதி சத்தாரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.