கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் தட்டுப்பாட்டினால் மருத்துவர்கள் இன்சுலினை வெளியில் வாங்குமாறு தெரிவிப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய வைத்தியசாலைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது குரங்கம்மை தொற்றுக் குறித்த எவ்வித அச்சுறுத்தலுமில்லை என்பதால் வைரஸ் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை வைரஸ் இலங்கையில் தோன்றியதல்ல என்பதால் இது சமூக பரவலை ஏற்படுத்தும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.