நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற்கொண்டு சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆணைக்குழு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் வாழ்க்கை, உடல்நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்காத வேலைகளில் மட்டுமே பணியமர்த்த முடியும் என்பதோடு பாதுகாப்பற்ற வேலைகளில் இணைத்துக்கொள்வது சட்டவிரோதமாக கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார அழுத்தத்தை கருத்திற்கொண்டு பணம் சம்பாதிப்பதற்காக சிறுவர்களை விருப்பமில்லாமல் வேலைக்கு அமர்த்தும் போக்கு காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.