தொல்பொருட் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தொல்பொருட் திணைக்களத்திற்குப் பின்னால் இருந்து இராணுவத் தளபதிகளை கொண்டு மூல காரணமாகச் செயற்பட்டவர்.
எனவே அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கவேண்டும். குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து விதுர விக்கரம நாயக்கதான் முக்கியமாக செயற்பட்ட ஒருவராவார்.
அவ்வாறே மட்டக்களப்பில் குசனார் மலைக்கு அவர் வந்தபோது பாரிய எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தோம். எனவே ஜனாதிபதி ஏன் விக்கிரம நாயக்கவை இதுவரைக்கும் கண்டிக்க வில்லை?
உண்மையில் அமைச்சர் விக்கிரம நாயக்கவை பதவில் இருந்து விலக்கவேண்டும். ஜனாதிபதி வெறுமனவே பணிப்பாளரை நீக்குவதற்கு காரணம் என்ன?
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எங்களுடைய ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக எடுக்கும் சில முயற்சி என்பது தெளிவாகின்றது.
அவர் உண்மையிலே தீர்மானம் எடுக்க வேண்டுமாயின் விதுர விக்கிரம நாயக்காவை பதவில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.