பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் கலடகன் நகருக்கு அருகே ,கடலுக்கடியில் 120 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் அருகில் உள்ள மாகாணங்களில் உணரப்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நில நடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதமோ சம்பவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மணிலாவில் உள்ள ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.