யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வலியுறுத்தினர்.
விமான நிலையத்தின் வடக்கு பக்கம் அதாவது கடல் பக்கம், இயன்றளவு காணிகளை ஓடுதளத்தை விஸ்தரித்து, தெற்கு பக்கத்தில் மிக சொற்ப அளவிலான காணிகளை எடுத்து விஸ்தரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆலோசனை முன்வைத்தார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர், விமான நிலைய உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.