உகாண்டாவில் பாடசாலையொன்றின் மீது நேற்று (16) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு உகாண்டாவின் போண்ட்வே( Mpondwe)பகுதியில் இயங்கிவரும் பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த பாடசாலைக்குள் நுழைந்த, ISIS அமைப்புடன் தொடர்புபட்ட கிளர்ச்சியாளர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், 38 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உகாண்டா பொலிஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா கருத்துத் தெரிவிக்கையில் , ” பாடசாலையில் உள்ள ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டுள்ளது . அத்துடன் உணவுக்கூடம் ஒன்றும் சூறையாடப்பட்டுள்ளது. இதுவரை 41 உடல்கள் பாடசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.