பறவையால் விமானியொருவர் படுகாயமடைந்த சம்பவம் ஈக்வடோரில் இடம்பெற்றுள்ளது.
ஈக்வடோரின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அவ்விமானத்தின் மீது இராட்சத பறவை ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக விமானத்தின் cockpit அறை சேதமடைந்தது. இதில் முன்பக்கக் கண்ணாடிகள் சிதறி விழுந்ததால் விமானி படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பறவை ஆண்டியன் காண்டன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.