இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன்ஷா அப்ரிடி அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு காலியில் நடந்த முதல் டெஸ்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்ரிடிக்கு நீண்ட காலம் ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் அவர் ஆசியக் கிண்ணத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
மேலும் அவுஸ்ரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட மற்றொரு காயம், சொந்த நாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது.
இதேநேரம் 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் புதுமுக வீரர்களான மொஹமட் ஹுரைராவிற்கும் சகலதுறை வீரரான அமீர் ஜமாலும்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான அணியில் மொஹமட் ரிஸ்வான், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அஹமட், ஹசன் அலி, இமாம் உல் ஹக், மொஹமட் ஹுரைரா, மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நோமன் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் மொஹமட், சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.