உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வழங்கும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலு குறித்த நகல் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் சமர்ப்பித்த பின்னரே அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என விஜேதாச ராஜபக்ஷ கறிப்பிட்டுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நக அடுத்த மாத இறுதிக்குள் தயாராகிவிடும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் அனுமதியளித்ததும் டிசம்பர் மாதம் முதல் அதற்காக ஆணைக்குழு செயற்பட ஆரம்பிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.