அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் நேற்று (திங்கட்கிழமை) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் 05 வருடங்களின் பின்னரே சீனாவிற்கு வருகைதந்த நிலையில் இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீன ஜனாதிபதியை சந்திக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்திருந்த போதும் இந்த சந்திப்பு நிச்சயமற்ற நிலையிலேயே நீடித்தது.
இந்த சந்திப்பில், இரு நாடுகளை பாதிக்கும் பொருளாதார விவகாரங்கள், அமெரிக்க தகவல்கள் திருட்டு தொடர்பாக சீனா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.