இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.
நெடுந்தீவு அருகே நேற்று இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கடற் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நேற்று மேலுமொரு படகும் வெறுமையாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு தொடர்பாகவும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.