சிகிச்சைக்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்து முத்துராஜா யானை (சக்சுக்ரின்) மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதற்கான ஆவணங்களைத் தாய்லாந்து அதிகாரிகளிடம்தான் சமர்ப்பித்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகவீனமுற்ற முத்துராஜா யானை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தினால் இலங்கைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட முத்துராஜா திடீரென சுகையீனமுற்ற நிலையில், அதற்கு முறையான சிகிச்சையளிக்க இலங்கை அதிகாரிகள் தவறியமையினால் முத்துராஜாவை ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.