இசை நிகழ்ச்சிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை மேற்கோள் இட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பதிவில் ” இதுவரைகாலமும் இசைநிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர அளவு பி.ப 10. 30 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் குறித்த கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் அதிகாலை 1.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஞாயிற்றுக்கிழமைகளில், இசை மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் வைத்தியசாலைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.