நான் பிரதமர் மோடியின் ரசிகன், அவரை மிகவும் நேசிக்கின்றேன்” என செல்வந்தரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) தெரிவித்துள்ளார்.
3நாட்கள் அரச முறைப் பயணமாக நேற்றைய தினம் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நியூயோர்க்கில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின்போது இந்நிலையில்” உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியா அதிக உறுதியுடன் உள்ளதாகவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்து தான் மிகவும் ஆவலாக இருப்பதாகவும், தனது மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாகக் திகழும் டெஸ்லா இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மோடி நாட்டின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும், இது ஒரு அருமையான சந்திப்பு எனவும், அவர் இந்தியாவில் முதலீடு செய்ய தன்னைப் போன்றோருக்கு உந்துதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அடுத்தாண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக ,தங்களின் ஸ்டார்லிங்க் இணைய தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் தொலைதூர கிராமப்புறங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு சேவை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.