ரஷ்யாவின் இராணுவத் தலைமையை கவிழ்க்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் அறிவித்துள்ள நிலையில் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுதமேந்திய கலகத்தைத் தொடங்கியதற்காக வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு எதிராக ரஷ்யா கிரிமினல் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
உக்ரைன் படையெடுப்பின் போது ரஷ்ய இராணுவத்திற்கு உதவுவதற்காக கூலிப்படை குழு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை அடுத்து வாக்னர் குழுவின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஷின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் எல்லையைத் தாண்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தெற்கு லிபெட்ஸ்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய தலைநகரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பை வலுப்படுத்த வீதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மொஸ்கோ மேயர் அறிவித்துள்ளார்.