இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேரமுடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக பென் டக்கெட் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்ககாது களத்தில் உள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகின இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதல் இன்னிஸிற்காக களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 416 ஓட்டங்களை குவிக்க பதிலுக்கு தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து 91 ஓட்டங்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த அவுஸ்ரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இங்கிலாந்து அணிக்கு 371 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் போட்டியின் 5 ஆவதும் இறுதி நாளான இன்று மேலும் 6 விக்கெட்கள் கைவசம் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 257 ஓட்டங்களை குவிக்க வேண்டும்.