பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றைய தினம் ஜேர்மனிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நான்காவது இரவாக தொடர்ந்தும் கலவரம் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்ட அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவனின் இறுதி சடங்கு நேற்று இடம்பெற்றது.
இந்நிலையில் சுமார் 45,000 அதிகாரிகள் இலகுரக கவச வாகனங்களின் ஆதரவுடன் நிலை நிறுத்தப்பட்ட போதிலும், நேற்று இரவும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
வன்முறை சம்பவங்களை அடுத்து 1,311 பேர் ஒரே இரவில் கைது செய்யப்பட்டதாகவும் இதற்கு முதல்நாள் இரவில் 875 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் 700க்கும் மேற்பட்ட கடைகள் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வங்கிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சூறையாடப்பட்டதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.