மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் காலை முதல் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக ஹட்டன் நுவரெலியா, ஹட்டன் கொழும்பு பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.