ஆடவருக்கான ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, சூப்பர் சிக்ஸில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி டக்கலூயிஸ் முறைப்படி 74 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
சிம்பாவேயின் புலவாயோ மைதானத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாவே அணி 48 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக விக்ரம்ஜித் சிங் 110 ஓட்டங்களையும் வெஸ்லி பரேசி 97 ஓட்டங்களையும் பாஸ் டி லீடே 39 ஓட்டங்களையும் மேக்ஸ் ஓ’டவுட் 35 ஓட்டங்களையும் சாகிப் சுல்பிகர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் ஓமான் அணி சார்பாக பிலால் கான் 3 விக்கெட்களையும் மொஹமட் நதீம் 2 விக்கெட்களையும் ஃபயாஸ் பட் மற்றும் அயன் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றபோது போதிய வெளிச்சம் இன்மையால் நெதர்லந்து அணி டக்கலூயிஸ் முறைப்படி 74 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
சூப்பர் சிக்ஸில் இலங்கை அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இடத்திற்கான மும்முனை போட்டி தற்போது சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சிம்பாப்வே அணையை ஸ்கொட்லாந்து அணி வெற்றி பெற்றால், நெதர்லாந்து அணி போட்டியில் இருந்து வெளியேறும்.