உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவியில் இருந்து இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகவங்கியை மேற்கோளிட்டு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிதி முக்கிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் வளர்ச்சி இலக்குகளை ஆதரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூன் 28 அன்று, உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கியது
இந்த நிதியுதவி மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கிய நிதியுதவியை அடுத்து நாட்டிற்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி உதவியாகும்.
இந்த நிதியுதவியானது இலங்கைக்கு அடிப்படையான சீர்திருத்தங்களை அமுல்படுத்த உதவும் என உலக வங்கி கூறியுள்ளது.